Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் நவராத்திரி ... காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிப்பு காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசராவில் தனியார் தர்பார் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைசூரு தசராவில் தனியார் தர்பார் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
10:10

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டுள்ளது.


மன்னர் காலத்தில் இருந்தே, மைசூரில் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மன்னர் காலத்தில் நடந்த பொது தர்பார் நிகழ்ச்சியில், தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் மன்னர்கள் அமர்ந்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்பர். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து, கர்நாடகா தனி மாநிலமாக உருவான பின், சிம்மாசனம் அரசு சொத்தாக மாறியது. மைசூரு அரண்மனையின் கடைசி மன்னர் ஜெய சாமராஜா உடையார் காலத்தில், சிம்மாசனம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 


9 பாகங்கள்: அந்த சிம்மாசனத்தை ஒன்பது பாகங்களாக பிரித்து, மைசூரு அரண்மனையின் ஒரு அறையில் வைத்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா நடக்கும் போது, சிம்மாசனத்தின் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஜோடிக்கப்படும். அரண்மனையில் உள்ள அம்பா விலாஸ் தர்பார் ஹாலில், இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவார். இதில் மன்னர் குடும்பத்தினர், முக்கிய மதகுருக்கள், அரண்மனை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த ஆண்டு தசராவை முன்னிட்டு, நேற்று சிம்மாசனம் ஜோடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 7:00 மணியில் இருந்து காலை 10:00 மணி வரை அம்பா விலாஸ் தர்பார் ஹாலில் சண்டி ஹோமம்; கணபதி ஹோமம்; சாமுண்டீஸ்வரி பூஜை; நவக்கிரஹ பூஜைகள் நடத்தப்பட்டன.


பட்டத்து யானை: அதன்பின் சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணி தொடங்கியது. அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி; இளவரசர் யதுவீர்; மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், அரண்மனை நிர்வாக அதிகாரி சுப்பிர மணியன் உள்ளிட்ட அதிகாரிகள், கண்காணிப்பில் சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. மதியம் 1:15 மணிக்கு சிம்மாசனம் ஜோடித்து முடிக்கப்பட்டது. மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கெஜ்ஜஹள்ளி கிராமத்தின் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், சிம்மாசனத்தை ஜோடித்தனர். அதன்பின், சிம்மாசனம் துணியால் மூடி வைக்கப்பட்டது. பின், யதுவீர் தலைமையில் பட்டத்து யானை, குதிரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வரும் 11ம் தேதி சிம்மாசனத்திற்கு, யதுவீர் சிறப்பு பூஜை செய்வார். அதன்பின் காலை 10:00 மணி முதல் காலை 10:30 வரை; மாலை 5:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிம்மாசனத்தில் அமர்ந்து, தனியார் தர்பார் நடத்துவார். இதுபோல 21ம் தேதி வரை தினமும், சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தவுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 
temple news
மைசூரு: தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்துவதற்காக, மைசூரு அரண்மனைக்கு வந்த, அபிமன்யு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar