பதிவு செய்த நாள்
10
அக்
2020
10:10
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் அருள்பாலித்தார்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் கொண்டு வந்த பால், பூக்களால் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்வது ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கன்னிவாடிதோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிேஷகம் செய்தனர். மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி, கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.