காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2020 05:10
காரைக்கால்: காரைக்காலில் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின் உற்சவர் நித்திய கல்யாண பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னாராக பெருமாளாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கொண்டு பெருமாளை தரிசனம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்திய கல்யாண பக்த ஜசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.