வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பூர், உதவி ஆணையர் வெங்கடேஷ், காங்கயம் ஆய்வர் அபிநயா, வெள்ளகோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்தனர். நேற்று வரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 886 மற்றும் தங்கம் 34,500 கிராம், வெள்ளி 33.500 கிராம் பக்தர்களின் காணிக்கையாக உண்டியலில் பெறப்பட்டது. கடந்த ஜூன் 22 ம் தேதி உண்டியல் திறப்பிற்கு பிறகு அக் 9 ல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. கொரோனா காலத்தில் கோவில் மூடப்பட்டு பக்தர்களை அனுமதிக்காமல் பூஜைகள் நடந்து வந்தது.மீண்டும் 40 நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் வழிகாட்டு நெரிமுறையுடன் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.