பதிவு செய்த நாள்
11
அக்
2020
05:10
நாமக்கல்: புரட்டாசி, நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் பெருமாள் கோவில்களில், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.
நாமக்கல் நகரின் மையத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், திருநீறு, தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால், அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டு சென்றனர்.
* புதன்சந்தை அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், மலையேறுவதற்கு, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சுவாமி வழிபாட்டுக்காக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தியை வழிபட்டு சென்றனர்.
* மோகனூர், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், விசேஷ அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை, கருட சேவை, திருக்கோடி தீபம் ஏற்றமும் நடந்தது. அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு அபி?ஷக, ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.