நெட்டப்பாக்கம்:சிவன்படைப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சிவன்படைப்பேட்டையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம்.அமாவாசையான நேற்று ஊஞ்சலில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அழகப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.