திருக்கனூர்:திருக்கனூர் அடுத்த கொடுக்கூர் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 21ம் தேதி காலை 6 மணிக்கு கரிக்கோலம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. 22ம் தேதி காலை 9 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிகழ்ச்சி நடந்தது. இன்று 23ம் தேதி காலை 6 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு அய்யனாரப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.