விருத்தாசலம் : நேமம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விருத்தாசலம் அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 4ம் தேதி காப்பு கட்டும் உற்சவத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு மகாபாரத கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி பூ எடுத்தல் நிகழ்ச்சி, 20ம் தேதி அரவாண் கடபலி நடந்தது. 21ம் தேதி தீமிதி உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து, தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.