திருக்கோவிலுார்; விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மணலுார்பேட்டையில் நடந்தது.கிராம கோவில் பூசாரிகள் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சதீஷ், பாபு, அருண்பாண்டியன், செல்வம் முன்னிலை வகித்தனர். பாலமுருகன் வரவேற்றார்.மாநில அமைப்பாளர் ராஜா, அமைப்புச் செயலாளர் ராமன், மாநில இணை அமைப்பாளர் அம்மணிஅம்மன் ரமேஷ், கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.கூட்டத்தில் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.