விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) சங்கர், ஆய்வாளர்கள் திட்டக்குடி தேவராஜ், விருத்தாசலம் லட்சுமிநாராயணன் உட்பட கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.அதில், ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 380 ரொக்கம், 23 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாத திறப்பின்போது, ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 773 இருந்தது குறிப்பிடத்தக்கது.