பதிவு செய்த நாள்
16
அக்
2020
02:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று முன்தினம் நந்தி பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிேஷகம் செய்து பூஜை நடந்தது. அதேபோல், நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவில், சிவன் கோவில், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர் மற்றும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சின்னசேலம்தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுரை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பும்,. 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.6:00 மணிக்கு வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வரர் பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபசார தீபாராதனை நடந்தது.