பதிவு செய்த நாள்
19
அக்
2020
01:10
திருப்பூர்:சிவன்மலை கோவிலுக்கு, பக்தர்கள் அதிகம் வராததால், பஸ் இயக்கப்படாமல், புதர் சூழ்ந்துள்ளது. சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அடிவாரத்தில் இருந்து, பக்தர்கள் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்றுவர பஸ் இயக்கப்படுகிறது. இதுநாள் வரை, இரண்டு பஸ் இயக்கப்படுகின்றன.
கொரோனா ஊரடங்கால், மார்ச் மாதத்தில் இருந்து, கோவில்களில் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின், ஒரு மாதமாக மட்டும், சுவாமி தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.தொற்று பரவல் குறையாமல் இருப்பதால், பக்தர்கள், கோவிலுக்கு சென்று வருவது குறைந்திருக்கிறது. சிவன்மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள், படிக்கட்டில் ஏறிச்சென்று, வழிபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலால், பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால், அடிவாரத்தில் நிற்கும் பஸ்களை சுற்றி, முட்புதர் வளர்ந்துள்ளது; பஸ் பழுதாகும் வாய்ப்பும் இருப்பதால், தினமும் சோதனை அடிப்படையிலாவது, மலைமேல் பஸ் இயக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.