பதிவு செய்த நாள்
19
அக்
2020
05:10
திருப்புவனம் : ஒரு இனம், மொழி, நாடு காக்கப்பட, அது சார்ந்தவர்களுக்கு அவற்றின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் மண்மூடிய சரித்திரத்தை தோண்டி எடுத்து தெரிவிப்பது தொல்லியல் துறை. தொல்லியல் பற்றிய அறிவை பொதுமக்களுக்கு ஊட்டும் வகையில், இன்று உலக தொல்லியல் தினம் கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் நடந்து வரும் அகழாய்வு மூலம் தமிழர் நாகரீகம், வணிகம், கல்வி, விவசாயம், தொழில், கலைநுட்பம் உள்ளிட்aடவை வெளிவந்துள்ளது. தமிழகத்தில் தொல்லியல் துறை மூலம் 40 இடங்களில் அகழாய்வு நடந்தாலும் கீழடி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அகழாய்வு பணிகள்அகழாய்வு என்பது நீண்ட நெடுங்காலமாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் குறிப்புகள், ஆவணங்கள் மூலம் தற்போதைய நவீன வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை நதியை ஒட்டியுள்ள 293 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழடியில் பணிகள் தொடங்கப்பட்டன.2015 ஜூனில் மத்திய தொல்லியல் துறை, பெங்களுரூ 6வது பிரிவு அகழாய்வு பணிகளை தொடங்கியது. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன், உதவி தொல்லியலாளர் ராஜேஷ் உள்ளிட்ட குழுவினர் இரண்டு கட்ட அகழாய்வையும் ஸ்ரீராமன் தலைமையிலான குழு 3ம் கட்ட அகழாய்வையும் நடத்தினர். 4, 5 மற்றும் 6ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை நடத்தியது.நான்காம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட 5820 பொருட்களில் குறிப்பிட்ட சில பொருட்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு மையத்தில் ஆய்வு செய்யப்பட்ட போது கீழடியில் கிடைத்த பொருட்கள் 6ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என கண்டறியப்பட்டது.அணிகலன்கள்கீழடி அகழாய்வில் அதிகளவில் அணிகலன்கள் கண்டறியப்பட்டன. சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், கழுத்து மணிகள், பாசிகள், அகேய்ட் வகை அணிகலன்கள், சூதுபவளம் உள்ளிட்டவைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. நட்சத்திர வடிவ அணிகலன்கள், பூக்கள் போன்ற அணிகலன்கள், சதுர வடிவிலான அணிகலன்கள், மீன் முட்களில் செய்யப்பட்ட அணிகலன்கள், தங்க காதணி உள்ளிட்டவைகள் முக்கியமானவை ஆகும். இதுதவிர கண்களுக்கு மை தீட்டும் குச்சிகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.விளையாட்டு பொருட்கள்கீழடி அகழாய்வில் விளையாட்டு பொருட்கள் கிடைத்துள்ளன. செஸ் காயின்கள் போன்ற அமைப்பு, சக்கரம் போன்ற அமைப்பு, பொம்மைகள், வட்டச்சில்லுகள், உருண்டை வடிவ கற்கள், சுழல் விளையாட்டு சாதனம் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.முதுமக்கள் தாழிகள்கீழடி அகழாய்வில் பெரிதும் முக்கிய பங்காற்றியது முதுமக்கள் தாழிகள் தான், 6ம் கட்ட அகழாய்வு நான்கு இடங்களில் நடந்தன. அதில் கொந்தகை பண்டைய காலத்தில் ஈமகாடாக இருந்தது தெரியவந்துள்ளது. பண்டைய காலத்தில் மூன்று நிலைகளில் இறந்தவர்களை புதைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளன. மேலும் முதுமக்கள் தாழிகளினுள் உணவு குவளை, தண்ணீர் பாத்திரம், ஆயுதங்கள் உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டன. கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளுடன் அவற்றின் மூடியும் முழுமையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.உறைகிணறுகள்கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள் தமிழரின் நீர் மேலாண்மையை பறைசாற்றும் வண்ணம் உள்ளன. 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகள் அளவில் பெரியதாக இருந்தாலும் 5 முதல் 7 அடுக்குகள் வரையே இருந்தன. 6ம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகள் 38 அடுக்குகள் வரை உள்ளன. 6மீட்டர் உயரமுள்ள இந்த உறைகிணறு தமிழத்தில் இதுவரை கண்டறியப்பட்ட உறைகிணறுகளிலேயே பெரியது என கருதப்படுகிறது.
இதன் மூலம் தண்ணீரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.வளர்ப்பு பிராணிகள்கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட விலங்கின் எலும்புகளை கொண்டு பண்டைய காலத்தில் விலங்குகளை பழக்கி பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது. 4ம் கட்ட அகழாய்வில் திமில் உள்ள காளை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் 85 செ.மீ நீளமுள்ள பெரிய விலங்கின் எலும்பு கண்டறியப்பட்டது. விவசாயத்திற்கும், பாதுகாப்பிற்கும், உணவிற்காகவும் விலங்குகளை பயன்படுத்தியிருக்க கூடும் என தெரியவந்துள்ளது.பானை குறியீடுகள்கீழடி அகழாய்வில் 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் வில் அம்பு , மீன் உருவம் வரையப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் தமிழ் எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.