பதிவு செய்த நாள்
21
அக்
2020
10:10
திருப்பதி: திருமலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாள் இரவு நடந்த கருட சேவையை, பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே, டிவி வாயிலாக பார்த்து தரிசித்தனர்.
திருமலை திருப்பதியில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று காலை, மலையப்பசாமி, தாயாரின் அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்தார். மாலையில், கருட வாகன சேவை நடந்தது. மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருள்வதால், பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையாக, இது, கருதப்படுகிறது. இந்த வாகனத்தில், மலையப்பசாமி, பல வகை ஆபரணங்கள் அணிந்தபடி அருள் பாலித்தார். கருட வாகன சேவையை காண்பவர்களுக்கு, மோட்சம் சித்திக்கும் என நம்பப்படுவதால், வழக்கமாக இதைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள், திருமலையில் திரள்வர். தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரம்மோற்சவம், கட்டுப் பாடுகளுடன் நடத்தப்படுகிறது. தேவஸ்தான, டிவி சேனல் வாயிலாக, பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே, இந்த சேவையை தரிசித்தனர்.