ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரிலுள்ள மியூசியத்தில் அபூர்வ காளி சிலை உள்ளது. கறுப்பு சலவைக்கல்லால் ஆன இந்த அம்மனுக்கு ஒரு முகம் மட்டும் பெண் வடிவம். மற்ற முகங்கள் குதிரை, யானை, கரடி, சிங்கம், நாய், குரங்கு, நரி, இன்னும் இனம் தெரியாத இரண்டு மிருக வடிவமாக உள்ளது. ஒரு மனிதன் மீது தாமரை பீடம் அமைக்கப்பட்டு, அதில் இந்தக் காளி நின்ற கோலத்தில் உள்ளாள். நாக்கை வெளியே நீட்டிய அம்மனின் கழுத்தில் மண்டை ஓடு மாலை, உடலில் பாம்பு, பூணுால் உள்ளது.