காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 10:05
புதுச்சேரி : காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தேர்த் திருவிழா இன்று நடக்கிறது. அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவிலில் 68ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று (25ம் தேதி) காலை 8 மணிக்கு நடக்கிறது. பகல் 12 மணிக்கு பால்சாகை வார்த்லும், மாலை 4 மணிக்கு செடல் உற்சவமும் நடக்கிறது. வரும் 1ம் தேதி மாலை 3 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு, இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.