மயிலாடுதுறை: ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றத்தின் சார்பில் மயிலாடுதுறை தாலுகா சோழன் பேட்டை ஸ்ரீ அழகிய நாதர் திருக்கோயிலில் ஐப்பசி மாத மகா பிரதோஷம் நடைபெற்றது. பிரதோஷ விழாவில் நந்தியம் பெருமானுக்கு பால் தயிர் இளநீர் மற்றும் இதர திரவங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு அலங்காரம் செய்து தேவாரம் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாரதனை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் மற்றும் அழகிய நாதர் திருப்பணி மன்ற நிர்வாகிகள் கருப்பையா, மீனா, சுப்பிரமணியன் மற்றும் சோழன் பேட்டை ஊர் பிரமுகர்கள் செய்திருந்தார்கள்.