இருக்கன்குடி மாரியம்மன் சர்ச் என சமூக வலை தளத்தில் விஷமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2020 05:10
சாத்தூர்: சாத்தூர் இருக்கன் குடி மாரியம்மன் கோவிலை சமூக வலை தளத்தில் இருக்கன் குடி சர்ச் என பதிவிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இருக்கன் குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மாவட்ட போலீஸ் எஸ்.பி.பெருமாள் ளிடம் அளித்துள்ள புகார் விபரம் பின் வருமாறு: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோவிலாகும். இக்கோவிலுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக நிர்வகிக்கப்படும் அலுவல் சார்ந்த இணையதளத்தில் திருக்கோவில் கான ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் வலைதளப் பக்கத்தில் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் என்பதற்கு பதிலாக அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் சர்ச் என உள்ளது , போன்ற போலியான வலைதளத்தை உருவாக்கி திருக்கோவிலுக்கும் அறநிலைத்துறை க்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் தகவல் வாட்ஸ்அப் செயலி மூலமாக தெரிய வந்தது . ஆனால் திருக்கோயில் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவல் சார்ந்த வலைதளப் பக்கத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி என்றே உள்ளது. இவ்வாறு திருக்கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வலைதளம் மீதும் பதிவிட்ட மர்ம நபர்கள் மீதும் சைபர் கிரைம் குற்றத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாகரன் புகார் மனு அளித்துள்ளார். மேலும் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. அலுவல் சார்ந்த வலைதள முகவரிwww.tnhrce.gov.in ல் கோவில் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் . வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்ப வேண்டாம் என திருக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.