பதிவு செய்த நாள்
30
அக்
2020
03:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள, தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை வன்னியதெருவிலுள்ள தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 27 காலை, முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்று மாலை, தீர்த்தக்குடம், புற்று மண் எடுத்து கொண்டு வருதல், முதற்கால யாக வேள்வி பூஜை நடந்தன. நேற்று முன்தினம், மூலவர் விமான கோபுரத்துக்கு தானியம் நிரப்புதல், கோபுர கலசம் வைத்தல், தண்டு மாரியம்மனுக்கு சக்ரஸ்தாபனம் நடந்தன. நேற்று காலை, யாக சாலையிலிருந்து, தீர்த்தக்குடம் கோவிலை சுற்றி உலா கொண்டு சென்று, கோபுர விமானத்துக்கும், தண்டு மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தண்டு மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், கோ பூஜை, சப்த கன்னிகா பூஜை, தச தரிசனம், மஹாதீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.