புதுச்சேரி: ஐப்பாசி மாத பவுர்ணமியையொட்டி குருசித்தானந்த சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு குரு சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. அதனையொட்டி, 200கிலோ அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட அன்னம், காய்கறி மற்றும் பழங்களால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந் து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடை வெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி ஆகியோர் செய்திருந்தனர்.