பதிவு செய்த நாள்
31
அக்
2020
06:10
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே உள்ள, பர்வதமலை மீது ஏற தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே, தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பர்வதமலை, 4,560 அடி உயரம் கொண்டது. இதன் உச்சியில் பலாம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. கருவறையில் உள்ள சுவாமி, அம்மனை பக்தர்களே அபி?ஷகம், பூஜை செய்து வழிபடுவர். பவுர்ணமி நாட்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், மலை மீது ஏறி சென்று, இரவு அங்கேயே தங்கி வழிபட்டு செல்வர். இந்நிலையில், நேற்று பவுர்ணமி நாளில் மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல், வெளி மாவட்ட பக்தர்களுக்கு தெரியாததால், நேற்று ஐப்பசி மாத பவுர்ணமிக்கு, அன்னாபி?ஷகம் நடத்த ஏராளமான பக்தர்கள், பர்வதமலை மீது ஏற வந்தனர். அப்போது செயல் அலுவலர் பரமேஸ்வரி, மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்களிடம் கூறி திருப்பி அனுப்பி வைத்தார். இதனால் பக்தர்கள் மலை மீது ஏறாமல், அடிவாரத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.