உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அபீதகுஜாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி விழாவை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அபீதகுஜாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு அன்னாபிஷேகம் விழா நடந்தது. அப்போது சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.