உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ தழுவ குழந்தை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவையொட்டி அன்ன அபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் ஸ்ரீ தழுவ குழந்தை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவையொட்டி அன்ன அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது.அதனை தொடர்ந்து அன்ன அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதேபோல் எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள், அன்ன அபிஷேகம் நடந்தது.