பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் உள்ள, ஆலுார் தேசிலிங்கேஸ்வரர் வீரமாஸ்தி அம்மன் கோவிலில், பவுர்ணமி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.