பதிவு செய்த நாள்
03
நவ
2020
05:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில், பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். கொரோனா தொற்றால், முகக் கவசம் உள்ள பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மேலும், பத்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு, மூலவரை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.