இறப்புக்கு அப்பாலும் ஒருவர் செய்த புண்ணியபாவங்கள் அவரைத் தொடரும் என்று மகான்கள் சொல்கின்றனர். திருவள்ளுவர் தர்மத்தை உயிருக்கு வழங்கும் சம்பளம் என்று குறிப்பிடுகிறார். "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்கிறார். அருளாளர்கள் கூறிய சத்தியவாக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும்.