தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 05:05
சென்ற பிறவியில் செய்த பாவபுண்ணியபலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத் தான் அவன் திருந்தும்வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார். இந்த கருணையைப் புரிந்து கொண்டவர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து அலட்சியப்படுத்துபவர்களும் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்பதுன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண்டேயிருப்பார். ஒரே பிறவியில் மனிதனைத் திருத்துவதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தராது.