மதுரை : மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோயில் பூஜாரிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கினார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கோயில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் மலைச்சாமி வரவேற்றார். மகளிரணி நிர்வாகி ஜெயராணி, கிழக்கு மண்டல தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.