Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிடாரி அம்மன் திருவிழா: வெள்ளி ... பூஜாரிகளுக்கு தீபாவளி புத்தாடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2020
05:11

கிருஷ்ணகிரி: கல்லுக்குறிக்கியில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடிக்கரையில், 300 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா ஊரடங்கால், குறைந்தளவே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக தேய்பிறை அஷ்டமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஆனால், கடந்த ஏழு மாதங்களாக பக்தர்களின் கூட்டம் குறைந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை மட்டும் நடந்து வருகிறது.

* அரூர், மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள, ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள காளியம்மன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar