பதிவு செய்த நாள்
11
நவ
2020
11:11
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, 1008 லிட்டர் பால் அபிேஷகம் நடக்கிறது.
குரு பகவான் வரும் 15ம் தேதி இரவு 9:48 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சிஅடைகிறார். புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா வரும் 15ம் தேதி காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், 1008 கிலோ சுண்டல் நிவேத்தியம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, பால், நெய், தயிர், தேன் உள்ளிட்ட 30 விதமான அபிேஷகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பிறகு, குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம்,ராசி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, 1008 லிட்டர் பால் அபிேஷகமும், மாலையில் கலச அபிேஷகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.