பதிவு செய்த நாள்
12
நவ
2020
04:11
மயிலாடுதுறை: ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு, நாளாம் கட்டளையில் 1.5 டன் எடையில், ஓம், என்ற பிரணவ மந்திர ஓசையை எழுப்பும் விதமாக செய்யப்பட்ட பிரமாண்டமாக மணி வாகனம் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு இருபுரமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் எழுந்தருளி யுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலி ப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும் என்பது அருள்வாக்கு. கோயிலில் திருப் பணிகள் ஸ்தாபதர் ரமணி அண்ணா மற்றும் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால், சோழர் கால பாணியை பின்பற்றி, திராவிடச் சிற்பக் கலை மரபுகளுடன், சிற் பக்கலை சாஸ்திரமாக கூறப்படும் ஆயாதி அளவு களுடன் மிகநுட்பமான, சிற்ப வேலையில் கை தேர்ந்த சிற்பிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
அதனையடுத்து கோயிலுக்கு பெரியதொரு மணி செய்ய அறங்காவலர்களால் திட்டமிடப்பட்டு, அதற்கான பொறுப்பு கோ யில் மணி செய்வதில் ஆறு தலைமுறையாக கைதேர்ந்த திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா நாளாம் கட்டளை கிராமத்தை சேர்ந்தவரும், விஸ்வகர்மா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மெழுகு அச்சு தயாரிக்கப்பட்டு, அதில் வெண்கலம், காப்பர், வெள்ளி ஈயம், செம்பு கலந்து மணி வார்க்கப்பட்டு, ஓசை எழுப்பம் நாக்கு பித்தளையால், 1.5 டன் எடையுடன் பிரமாண்டமாக ஓம், என்ற பிரணவ மந்திரத்தின் ஓசையை எழுப்பும் விதமாக மணி தயாரிக்கப் பட்டுள்ளது. தியாகராஜன் மற்றும் அவரது மகன்கள் சீனிவாசன், பரந்தாமன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மூன்று மாதத்தில் இந்த மணியை செய்து முடித்துள்ளனர். அதனை தொடர்ந்து முறைப்படி நாகராஜ பத்தரால் விஸ்வகர்மா பூஜைகள் செய்யப்பட்டு கிரேன்மூலம் வாகனத்தில் ஏற்றி கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று திருவோணமங்கலம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சன்னதியில் பிரமாண்ட மணி வைக்கப்பட்டு ரமணி அண்ணா தலைமையில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர் தொடர்ந்து கிரேன் மூலம் பிரமாண்ட மணி கோவிலை வலம் வந்தது பின்னர் ஆஞ்சநேயர் கோதண்டராமர் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் சன்னதிகளில் பிரமாண்டம் மணியை ரமணி அண்ணா அறங்காவலர்கள் ஒலிக்கச் செய்தனர் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமணி பூஜையை தரிசித்தனர்.