தீபாவளியையொட்டி பழநியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2020 04:11
பழநி : நாளை தீபாவளியையொட்டி பழநியில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் நெரிசல் நிறைந்த காந்தி ரோடு, ஆர்எப் ரோடு பகுதிகளில் கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மூலம் திருடர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. போலீஸ் ரோந்து பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஊர்க்காவல் படையினர் மற்றும் சாதாரண உடையில் போலீசார் அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், பொதுமக்கள் கூட்ட நெரிசல் நிறைந்த பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். சமுக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றார்.