பதிவு செய்த நாள்
14
நவ
2020
04:11
மனிதன், விலங்கு, இறைவன் இவர்களின் கலவை தான் மனிதப் பிறவி. இந்த மூன்றுமே மேல் வர வேண்டும் என்று புரியும், தவிர்க்க இயலாத போராட்டத்தில், வெறும் மனிதத் தன்மையையும், கீழான விலங்குத் தன்மையையும் அடக்கி, இறைத்தன்மையை வெல்லும் வகையை, நீ உறுதிப்படுத்த வேண்டும்.
இறைத்தன்மையிலிருந்து கீழே இழுக்கின்ற மனிதனின் நரக, அசுரப் போக்குகள் தோல்வி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவிழா சமயம் என்பது எது? சான்றோர் பிறக்கும் போதும், கொடியவரின் தீய வாழ்க்கை முடியும் போதும்!
தீபாவளி நரகாசுரனின் மரணத்தைக் கொண்டாடுகிறது. அவன் எவ்வாறு தன் முடிவைச் சந்தித்தான்? மங்கும் தன் கண்கள் முன்னிலையில் இறைவன் நின்றிருக்க, கிருஷ்ணனின் கைகளில் மரணமடைந்தான். தன்னுள் இருந்த அரக்கத்தன்மையை அழித்து, தெய்வ தன்மையை அடைந்தான். இது நாம் ஆசைப்படுவதற்குரிய நிறைவு. நற்குணங்கள் வளர்ந்து தீய குணம் கைவிடப்படும் போது, மனிதன் அதை, திருவிழாவாக மாற்ற வேண்டும்.
தோற்றங்கள் எவ்வாறாக இருந்தாலும், நேர்மை தான் மிகச் சிறந்த கொள்கை. ஒரு பொய்யை காப்பாற்ற, 100 பொய்கள் கூற வேண்டும். ஆனால் உண்மை கூறுவது, சுருக்கு வழி, பத்திரமான வழி. நீ எவ்விதம் இருப்பதாகக் கூறுகிறாயோ அவ்விதம் வாழ்ந்திரு; நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைக் கூறு. நீ அனுபவித்தது எதுவோ, அதை எடுத்துரை. கூடக் குறைய எதுவும் வேண்டாம்!
வைராக்கியம் காணாமல் போய்விடும்நீ உன்னை மறுதலித்து, உன்னையே ஏமாற்றிக் கொண்டால் வெட்கம் உன் மனதை இருளாக்கி, அச்சத்தை வளர்க்கிறது. காமம், பேராசை, வெறுப்பு, கர்வம் என்ற வேகங்களின் காரணத்தால், நீ பொய் வழியில் செல்கிறாய். அப்படிச் செல்லும் போது, திருப்தி, பணிவு, வைராக்கியம் ஆகியவை காணாமல் போய்விடும். பேராசையை ஆதாரமாக வைத்துக் கட்டப்படும் கனவு, அழிவுக்கு இட்டுச் செல்லும்.உருவ தியானத்தை விட நாம ஜபம் அதிக பலன் அளிக்கவல்லது. திரவுபதி, தன்னைக் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்து வர, தேரை அனுப்பவில்லை. பெருத்த வேதனையில், அவன் பேர் சொல்லி அழைத்தாள்; நடந்தது உங்களுக்குத் தெரியும்!
ஆன்மிக வைராக்கியம், உனக்கு தைரியமும், வலிமையும் தரும்.கடவுள் நாமத்தை உன் உயிர் மூச்சாக வைத்து, விழுந்து விடுவோமோ என்று அஞ்சாமல், வாழ்க்கையின் அனைத்து செயற்பாடுகளிலும், நீ ஈடுபடலாம். வைராக்கியம், உனக்கு சுய கவுரவத்தை அளித்து, அவதுாறு, பழிசொல் ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் வல்லமையைத் தருகிறது.
தோல்வியின், ஏமாற்றத்தின் அறிகுறி சிறிது தென்பட்டாலும், அழத் தொடங்காதே; அது வெறுக்கத்தக்க நடத்தை. நீ என்ன செய்து கொண்டிருந்தாலும், எந்த விதத்திலும் நீ யாரிடம் தொடர்பு கொண்டிருந்தாலும், இந்த நடப்புண்மையை நினைவில் வைத்திருக்க முயற்சி செய். இறைவன் நாமத்தைக் கூறிக் கொண்டிருப்பதை நீ கைவிடாதிருந்தால், இந்த முயற்சியில் நீ வெற்றி பெறுவாய்! உண்மையான விளக்குத் திருவிழா எந்த வீட்டில் கடவுள் நாமம் கேட்கப்படுவதில்லையோ, அந்த வீடு, குகை தவிர வேறல்ல. வீட்டில் நுழையும் போதும், வீட்டை விட்டுச் செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும், கடவுள் நாமத்தைக் கூறி, அதற்கு நறுமணம் கொடு; வெளிச்சம் கொடு; துாய்மைப்படுத்து. மாலை நேரத்தில் விளக்கேற்றுவது போல, கடவுள் நாமம் கூறு. அதிகாலையில் சூரியனை வரவேற்பது போல, நாமத்தைக் கூறி வரவேற்பு கொடு. அது தான் உண்மையான தீபாவளி விளக்குத் திருவிழா!
சனாதன தர்மத்தின் மூன்று அடிப்படை நம்பிக்கைகளான, வாழ்க்கையில் கர்மவினைப் பயன் தவிர்க்க இயலாதது; மறுபிறவி உண்டு; தெய்வத்தின் அவதாரங்கள் ஆகியவற்றின் மீது பிடிப்பு இல்லாமல், நீ ஹிந்து என்று கூறிக் கொள்ள இயலாது.உன்னிடம் இருக்கும் பணத்தாலோ, அந்தஸ்தாலோ, அதிகாரத்தாலோ, புத்தியாலோ, இன்ன பிறவாலோ உவகை கொள்ளாதே. நீ பிறருக்கு பயன் தர வேண்டும் என்பதற்காகவே, அவை உனக்கு பாதுகாப்புப் பொருளாக, கடவுளால் தரப்பட்டுள்ளன.பிறரிடம் உள்ள நல்லதைத் தேடிப் பார். பிறரைப் பற்றிய நல்ல சேதிகளைப் பற்றி மட்டுமே கேள்; அவதுாறுகளைக் கேட்காதே.இந்த தீபாவளி நன்னாளன்று நாமஸ்மரணம் என்னும் விளக்கு ஏற்றி, உதடுகள் என்னும் வாயிற் கதவருகில் வை; பக்தி என்னும் எண்ணெயை ஊற்று; நிலைமாறா இயல்பே, திரி!