விழுப்புரம் : விழுப்புரம் மருத்துவமனை ரோடு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சஷ்டி விரதம் மேற்கொள்ள காப்பு கட்டி, சுவாமியை வழிபாடு செய்தனர்.