ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2020 04:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று மாலை காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நவ.,20 ல் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. பெருவயல் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று இரவு 7:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உட்பிரகாரம் உலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நவ.,20 ல் சூரசம்ஹாரம், நவ.,21ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வழிவிடுமுருகன்கோயில், குண்டுக்கரை முருகன்கோயில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.