காளையார்கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2012 10:05
காளையார்கோவில் : காளையார்கோவில் சோமேஸ்வரர்சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.காலை 9.30 மணிக்கு கொடியேற்றி, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இரவு சுவாமி அம்மன் அலங்கார ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மே 28ம் தேதி இரவு அம்மன் தபக்சுகாட்சி, கதிர்குளித்தல் நிகழ்ச்சி,மே29 ம் தேதி மாலை திருக்கல்யாணம்,மே30 ம் தேதி சமணர்கள் கழுவேற்றமும்,மே 31 ம் தேதி காலை பொய்பிள்ளை மெய்ப்பிள்ளை நிகழ்ச்சி, ஜூன் 1ம் தேதி நடராஜர்தரிசனம், ஜூன் 2ம் தேதி தேரோட்டம், ஜூன் 3ம் தேதி தீர்த்த தெப்பத்துடன் விழா நிறைவு பெறுகிறது. காளையார்கோவில் ஒன்றிய யாதவா சங்கம் சார்பில் முதலாவது மண்டகப்படி சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை காளீஸ்வரக்குருக்கள் மற்றும் ஏஎல். ஏஆர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.