திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2020 08:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவ., 20 வரை காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது.
ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப் படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. சூரசம்ஹாரம்: தினம் இரவு 7:00 மணிக்கு தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஒருமுறை வலம் சென்று அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்வாக நவ. 19 கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், 20ல் சூரசம்ஹாரம், 21ல் மூலவர் முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.