சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்கிறது. ஆனால் தீபாவளியன்று மட்டும் குளிக்கலாம். சூரிய உதயத்தை ‛அருணோதயம்’ என்பர். சூரியனின் தேரோட்டி அருணன். அவன் சிவப்பாக இருப்பான். அவனது வருகையின் அடையாளமாக வானில் அதிகாலையில் சிவப்பு நிறம் பரவி விடும். இந்த சுபவேளையில் (அதிகாலை 5:00 – 5:30மணி) எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.