சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, மழை பெய்ததை அடுத்து அதை வீடியோ எடுத்துள்ளார். அதில், கோபுரத்தின் அருகேயுள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. ஒருவேளை வெளிச்சம் இருப்பதால் அப்படி தெரியும் என நினைக்க தோன்றும். ஆனால், அதே போல் வெளிச்சம் இருந்தும் அருகில் உள்ள கோபுரங்களில் மழைத்துளிகள் விழவில்லை என்பதுதான் ஆச்சரியம். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.