பதிவு செய்த நாள்
20
நவ
2020
09:11
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் இருந்தன. இவர்களில் சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். மூவரும் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். அதன் பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சி செய்யும் உரிமை பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னி, குபேரன் என தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.
தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். ‘சூரபத்மனை அழிக்க சிவபெருமானால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும்’ என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையை அடைந்து குழந்தைகளாக மாறின. அவற்றை பார்வதி ஒன்று சேர்த்த போது கந்தன் என ஏற்பட்டது. இவரே அசுரர்களுடன் போரிட்டு தேவர்களை காப்பாற்றினார். இந்த நாளே கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பயம் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க படிங்க. ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரியவேல் போற்றி
ஓம் அணைக்கும் வேல் போற்றி
ஓம் அன்புவேல் போற்றி
ஓம் அற்புதவேல் போற்றி
ஓம் அடக்கும்வேல் போற்றி
ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
ஓம் ஆளும்வேல் போற்றி
ஓம் ஆட்கொள் வேல் போற்றி
ஓம் இனிய வேல் போற்றி
ஓம் இரங்கு வேல் போற்றி
ஓம் இலை வேல் போற்றி
ஓம் இறை வேல் போற்றி
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
ஓம் ஈடிலா வேல் போற்றி
ஓம் உக்கிர வேல் போற்றி
ஓம் உய்க்கும் வேல் போற்றி
ஓம் எழில் வேல் போற்றி
ஓம் எளிய வேல் போற்றி
ஓம் எரி வேல் போற்றி
ஓம் எதிர் வேல் போற்றி
ஓம் ஒளிர் வேல் போற்றி
ஓம் ஒப்பில் வேல் போற்றி
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
ஓம் ஓங்கார வேல் போற்றி
ஓம் கதிர் வேல் போற்றி
ஓம் கனக வேல் போற்றி
ஓம் கருணை வேல் போற்றி
ஓம் கந்த வேல் போற்றி
ஓம் கற்பக வேல் போற்றி
ஓம் கம்பீர வேல் போற்றி
ஓம் கூர்வேல் போற்றி
ஓம் கூத்தன் வேல் போற்றி
ஓம் கொடு வேல் போற்றி
ஓம் கொற்ற வேல் போற்றி
ஓம் சமர் வேல் போற்றி
ஓம் சம்கார வேல் போற்றி
ஓம் சக்தி வேல் போற்றி
ஓம் சதுர் வேல் போற்றி
ஓம் சங்கரன் வேல் போற்றி
ஓம் சண்முக வேல் போற்றி
ஓம் சமரில் வேல் போற்றி
ஓம் சர்வசக்தி வேல் போற்றி
ஓம் சின வேல் போற்றி
ஓம் சீறும் வேல் போற்றி
ஓம் சிவ வேல் போற்றி
ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
ஓம் சித்ர வேல் போற்றி
ஓம் சிங்கார வேல் போற்றி
ஓம் சுரர் வேல் போற்றி
ஓம் சுடர் வேல் போற்றி
ஓம் சுழல் வேல் போற்றி
ஓம் சூரவேல் போற்றி
ஓம் ஞான வேல் போற்றி
ஓம் ஞானரட்சக வேல் போற்றி
ஓம் தனிவேல் போற்றி
ஓம் தாரை வேல் போற்றி
ஓம் திருவேல் போற்றி
ஓம் திகழ்வேல் போற்றி
ஓம் தீர வேல் போற்றி
ஓம் தீதழி வேல் போற்றி
ஓம் துணை வேல் போற்றி
ஓம் துளைக்கும் வேல் போற்றி
ஓம் நல் வேல் போற்றி
ஓம் நீள் வேல் போற்றி
ஓம் நுண் வேல் போற்றி
ஓம் நெடு வேல் போற்றி
ஓம் பருவேல் போற்றி
ஓம் பரன்வேல் போற்றி
ஓம் படைவேல் போற்றி
ஓம் பக்தர்வேல் போற்றி
ஓம் புகழ்வேல் போற்றி
ஓம் புகல்வேல் போற்றி
ஓம் புஷ்பவேல் போற்றி
ஓம் புனிதவேல் போற்றி
ஓம் புண்யவேல் போற்றி
ஓம் பூஜ்ய வேல் போற்றி
ஓம் பெருவேல் போற்றி
ஓம் பொறுக்கும் வேல் போற்றி
ஓம் மந்திரவேல் போற்றி
ஓம் மலநாசக வேல் போற்றி
ஓம் முனைவேல் போற்றி
ஓம் முரண்வேல் போற்றி
ஓம் முருகன்வேல் போற்றி
ஓம் முக்தி தருவேல் போற்றி
ஓம் ரத்தின வேல் போற்றி
ஓம் ராஜவேல் போற்றி
ஓம் ருத்திர வேல் போற்றி
ஓம் ருணவிமோசன வேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் வஜ்ரவேல் போற்றி
ஓம் வல்வேல் போற்றி
ஓம் வளர்வேல் போற்றி
ஓம் வழிவிடுவேல் போற்றி
ஓம் வரமருள் வேல் போற்றி
ஓம் விளையாடும் வேல் போற்றி
ஓம் வினைபொடி வேல் போற்றி
ஓம் வீரவேல் போற்றி
ஓம் விசித்திர வேல் போற்றி
ஓம் வெல்வேல் போற்றி
ஓம் வெற்றிவேல் போற்றி
ஓம் ஜயவேல் போற்றி
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி