பதிவு செய்த நாள்
19
நவ
2020
05:11
தேனி : பா.ஜ.,வின் வேல்யாத்திரை தமிழகத்தில் திட்டமிட்டப்படி நடக்க வேண்டும், சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என வேண்டி மாவட்ட பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவின் சார்பில் சீலையம்பட்டி பிரத்யங்கராதேவி கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. மாநிலத் தலைவர் நிர்மல்குமார், தேனி மாவட்டத் தலைவர் பாண்டியன் துவக்கி வைத்தனர். தகவல் தொழில்நுட்பம் - சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் பேசினர். பொருளாளர் பத்ரிநாத், செயலாளர்கள் மலைச்சாமி, மாரிச்செல்வம், செந்தில், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், அமுதா, நிர்வாகிகள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.