அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் 108 முறை கோவிலை வலம் வந்தனர்.