பதிவு செய்த நாள்
21
நவ
2020
05:11
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, நேருநகரில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போல், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் மார்கழி மாத முதல் சனிக்கிழமையில், படி திறக்கப்படுகிறது. அன்று முதல், ஆண், பெண் இருபாலரும் படியேற அனுமதிக்கப்படுவர். நடப்பாண்டு கொரோனா பரவலால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள், கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில், மாலையணிந்து, இருமுடி கட்டி, புளியயம்பட்டி ஐயப்பன் கோவிலில், 18ம் படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். நெய் அபிஷேகம் செய்யப்படும். சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.