பதிவு செய்த நாள்
23
நவ
2020
04:11
சென்னை: அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கான தகவல் உதவி மையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் உள்ளது. இதன் தரைத்தளத்தில், பொதுமக்களுக்கான தகவல் உதவி மையம், காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை இயங்கி வருகிறது.இம்மையத்தில், கோவில்கள் தொடர்பான புகார்களை பக்தர்கள் தெரிவிக்கலாம். அதற்கான ஒப்புதல் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.புகார், கோரிக்கை மனுக்கள், துறைக்கான இணையதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, பெட்டிஷன் பிராசஸ் போர்ட்டல் வழியாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவல் உதவி மையம் தற்போது விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. தகவல் உதவி மையத்தில் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மொபைல் போன் எண் அறிவிக்கப்பட்டு, பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, பக்தர்கள் கோவில்கள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.புகார் மற்றும் கோரிக்கைகளை, pro.hrce@tn.gov.in / tnendowments@tnhrce.com என்ற, மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்; 044 - 2951 5369 என்ற தொலைபேசி எண்; 94445 00246 என்ற, மொபைல் போன் எண்ணிலும் தெரிவிக்கலாம்.