பதிவு செய்த நாள்
24
நவ
2020
03:11
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடங்கியுள் ளது.வீடுகளில் விளக்கேற்ற மக்கள் ஆர்வமுடன் வாங்கிசெல்கின்றனர்.
கார்த்திகைமாதம் தீபத்திருவிழா நடப் பது வழக்கம் திருவண்ணாமலையில் கொப்பரை அளவில் பெரிய விளக்கு அமைக்கப்படும். அதில் நெய்ஊற்றி.. தீப மேற்றி கார்த்திகைதிருவிழா தொடங்கும். இதற்குப் பின், பழனிமலை முருகன் கோ விலில் தீபம் ஏற்றப்படும். இது பாரம்பரி யம் ஆகும். இரண்டு மலைகளிலும் தீபம் ஏற்றிய பின்பு, அனைவரின் வீடுகளிலும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். வீட்டுவாசல் தொடங்கி, படிகள், மாடிகள் சுற்றுச்சுவர்கள், மாட்டுதொழுவம், கடை கள், ஒர்க்ஷாப்கள், திருமண மண்டபங் கள் உள்ளிட்ட பல இடங்களையும், விளக் குகளால் அலங்கரித்து, மக்கள் பக்தியை யும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.
முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்தி கை தீபத்திருநாள் நிகழ்ச்சி நடப்பாண்டு நவ, 29 ம்., தேதி ஞாயிற்றுக்கிழமை நடக் கிறது. இதில் முக்கிய பங்கு வைப்பது விளக்குகள் தான். களிமண் தொடங்கி பீங்கான், பித்தளை, வெள்ளியில் செய்த விளக்குகள் வரை மக்கள் பயன்படுத்து வார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, மண்பாண்டத் தொழில் செய்வோர் பல கிராமங்களில் வசித்தனர். ஆயிரக்க ணக்கில் அகல்விளக்குகளை உற்பத்தி செய்து, விற்பனையில்ஈடுபட்டனர். ஆனா ல் தற்போது இந்ததொழிலில் ஈடுபடுவோ ர் மிககுறைந்துள்ளனர். சில இடங்களில் தான் அகல்விளக்கு உற்பத்தி செய்யப்ப டுகிறது. மடத்துக்குளம் பகுதி கடைகளில் விளக் குகள் விற்பனைக்குவந்துள்ளன. பத்து மண்விளக்கு பத்து ரூபாய், பீங்கான் விள க்கு ஒன்று 10 ரூபாய், ஐந்து அச்சு விளக் கு பத்து ரூபாய், மண்ணில் செய்த இரண் டு பெரிய விளக்கு 100 ரூபாய் என விற்ப னையாகிறது. இதுகுறித்து அகல்விளக்கு விற்ப னையாளர் கூறுகையில் " மண்ணி ல் உருவான விளக்குகள் அருகிலுள்ள கிராமங்களிலும், வேலைப்பாடு உள்ள விளக்குகள் வெளிமாவட்டங்களில் இருந் தும் கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்" என தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: "கொரோனா பாதிப்பால் இதர பண்டிகை கள் களைகட்டவில்லை. ஆனால் கார்த்தி கை தீபம்,அவரவர் வீடுகளில் வழிபடுவது தான். இதனால் தீபங்களால் சிறப்பாக வீடுகளை அலங்கரித்து கொண்டாட விள க்குகள் வாங்கிசெல்கிறோம்" என தெரி வித்தனர்.