‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்கிறது குர்ஆன். பணம் இல்லாவிட்டால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது என யாரும் நினைக்க வேண்டாம். பணம் இல்லாத ஏழைகளும் மனம் இருந்தால் தர்மம் செய்யலாம் என்கிறார் நாயகம். * உடன்பிறந்தோரைக் கண்டால் புன்சிரிப்பை பரிசளித்தல் * கண் முன் நடக்கும் தீமைகளை தடுத்தல் * தவறு செய்பவருக்கு நல்லதைச் சொல்லி நெறிப்படுத்துதல் * பார்வை இல்லாதவர்களுக்கு வழி காட்டுதல் * கல், முள்ளை எடுத்து நடைபாதையை சுத்தப்படுத்துதல் இவற்றை செய்வதற்கு பணமே தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.