பதிவு செய்த நாள்
26
நவ
2020
04:11
ஈரோடு: ஈரோடு, காமராஜர்புரம் மீனவர் காலனியில், காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணி முடிந்து, வரும், 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று அதிகாலை, கணபதி ?ஹாமத்துடன் விழா தொடங்குகிறது. கலச தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, மாலையில் வாஸ்து பூஜை, கலசம் யாக சாலைக்கு செல்லுதல் நடக்கிறது. 26ல் கோபுர கலச ஸ்தாபனம், 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு, விநாயகர், கன்னிமார், காளியம்மன் தெய்வ விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.