பதிவு செய்த நாள்
28
நவ
2020
11:11
திருப்பதி :திருமலை ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையில், பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிச., மாதம் நடக்கக்கூடிய இந்த கட்டண சேவைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட், நேற்றிரவு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களில், கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்களுக்கு, 90 நாட்களுக்குள் ஏழுமலையானை நேரில் வந்து தரிசனம் செய்வதற்கு, இரண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள், ஆன்லைனில் நடக்கும் சேவையில் மட்டும் பங்கேற்கலாம். ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு, அந்த சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுடன், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக பெற்று, 90 நாட்களுக்குள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும், தேவஸ்தானம் அறிவித்துள்ளது.