பதிவு செய்த நாள்
30
நவ
2020
08:11
பழநி: பழநி முருகன் கோவிலில், நாளை முதல், வின்ச்சில் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், கொரோனா முன்னெச்சரிக்கையாக, கடந்த மார்ச் முதல், இழுவை ரயில் எனப்படும், வின்ச் மற்றும், ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் இழுவை ரயிலில் மலைக் கோவிலுக்குச் செல்ல, ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். காலை, 6:00 முதல் இரவு, 7:40 மணி வரை, மூன்று, வின்ச்கள், 50 சதவீத பக்தர்களுடன் இயக்கப்படும்.
புக்கிங் செய்ய பயன்படுத்திய அடையாள சான்றின் அசலுடன் வர வேண்டும். அலைபேசி, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.மலைக் கோவிலுக்குச் செல்ல, கீழே இறங்க என இரு வழிப் பயணத்திற்கு கட்டணம், 100 ரூபாய். வின்ச்சில் செல்ல, www.palanimurugantemple.org என்ற இணையதளத்தில் புக்கிங் செய்யலாம். கோவிலில் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படாது.