பதிவு செய்த நாள்
01
டிச
2020
02:12
மதுரை: மதுரையில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 102வது, ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. உத்திரபிரதேசம், பலியா மாவட்டம், நர்தரா கிராமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமார் கடந்த, 1918, டிச.,1ல், பிறந்தார். அவர், 1959ல், திருவண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நிலையில், 2001 பிப்.,20ல், முக்தி பெற்றார்.
நேற்று அவரது மதுரை ஆஸ்ரமத்தில் அவரின், 102வது, ஜெயந்தி விழா தொடங்கியது. இதில், சுப்ரபாதம், அகவல், ஆரத்தி, நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், தாலாட்டு, கணபதி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. பின்னர், பகவான் யோகி ராம்சுரத்குமார் சிலையை வண்ண மலர்களால் அலங்கரித்தும், சன்னதிக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.